Saturday, September 4, 2010

கோழைக்குள் வீரன்...

மௌனமாய் இருப்பதனால் மெண்மை என்பதாகாது,
தலையை அசைபதனால் தத்தி என்று ஆகாது,
கோழைக்கும் கோபம் உண்டு,
உண்மையில் கோழையே வீரன் தன் பயம் அவனுக்கு தெரியும்,
வீரனை விலங்கிடும், சூழல் விலங்கின் திறம் கம்மி
மிரண்டால் சிதறிடும் விலங்குகள் எட்டுத்திக்கும்,
வீரனுக்கு தேவை திடம் மட்டுமே,
தன் சொந்தக் காலில் நிற்பானவன்,
தலை வணங்க மாட்டான், கால் பிடிக்க மாட்டான்,
அடித்தால் நெற்றியடிதான், புறமுதுகு காண்பித்தால் அது உன் கேடு !
எத்தனைக் காலம்தான் கோழைபோல் நடிப்பது?
உண்மையை அறிந்தால் நீ இங்கு அழிவாய்,
என் கல்லறைக்கு என்றோ இடம் பார்த்துவிட்டேன்,
மரணத்திடம் எனக்கு பயமில்லை, அதற்கே என்னிடம் பயம் !
சொந்தக்காலில் நிற்பதனால் கிழே விழுந்தால் அடி அதிகமில்லை,
அப்பன் தோளில் நிற்கும் நீ கிழே விழுந்தால் அடி அதிகம் !
நீ செல்வாய் தனியாக,
நான் செல்வேன் தனியாக,
பிறந்திடும்போது இருவருமே நிர்வாணம்தான்,
இதை நீ உணராவிட்டால் வாழ்க்கையே நிர்மூலம்தான் !
சொல்வதைச் சொல்லிவிட்டேன் மற்றவை உன் கையில்.

உடம்பினில் ஈரமிருந்து யாருக்கும் பயனில்லை,
மனதினில் ஈரமுள்ள எனக்கிங்கு மரணமில்லை,
சுடுகாட்டில் ஆடுகின்ற அந்த ஆதிசிவன் நான்தானே,
மண்டையோடும் சாம்பலும்தான் எனதுடமை,
புரிந்து நீ வழிவிடு,
இல்லையேல் உயிர்விடு !

Sunday, May 23, 2010

தூங்கிய இரவுகள் ! ! !

எண்ணும் போதெல்லாம் தூங்கிய
என்னை தூங்கிய இரவுகளை
எண்ண வைத்துவிட்டாய் . . !

Friday, July 17, 2009

முதல் மழை...

* அந்திப் பொழுது,
என் வீட்டு ஜன்னல் ஓரத்தில் அமர்ந்திருந்தேன்,
கையில் தட்டு நிறைய மனித குலத்தை பாவக் குழியில் தள்ளிய பழத்துண்டுகள் !
காதில் கையடக்க ஒலிப்பெருக்கி (அல்லது ஒலிக்குறுக்கியா?)
எனக்கு பிடித்த பாடல்கள் iPodல்இருந்து !
கண்கள் நீலக்கடலை நோக்கி,
ஏனோ கடல் அமைதியாக இருந்தது,
சலனமின்றி என் மனதைப்போல் !

* மதியம் கேட்ட வானிலை அறிக்கை மனதில் ஒலித்தது,
"வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் -
தமிழ்நாட்டில் பருவமழை ஆரம்பம்"
என் உதட்டின் ஓரம் ஏளனச் சிரிப்பு,
எனக்கும் கடலுக்கும் உள்ள ஒற்றுமைகள் எண்ணி,
அதற்கு காற்றழுத்தம்,
எனக்கு மன அழுத்தம் !

*வானம் கருத்தது,
கடிகாரத்தில் மணி நான்கு
ஆனால் ஏழு மணி இருட்டு !
தொலைவில் ஒரு மாடியில் உலர்த்திய துணிகளை அவசரமாக எடுத்துக்கொண்டு இருந்தால் ஒரு பெண்;
எனக்குக் குட அந்த துணிகள் போல் என் மனக்கவலைகளை கழட்டி உலர்த்த ஆசைதான் !

*என் பைக்கில் ஏதோ விழுந்தது போல் இருந்தது,
என்ன என்று பார்பதற்குள் விடை கிடைத்தது,
இந்த வருடத்தின் முதல் மழை, பெருந்துளிகளாய் பூமியை ஈரமாகியது,
என் காய்ந்துப்போகாத நினைவுகளையும்தான் !

* சென்ற வருடத்தின் முதல் மழை,
நானும் என்னவளும் இதே மெரினா கரையோரம்,
நடைபயிலும்போது கையில் குடையின்றி,
அவளது துப்பட்டாவை தலைமறையாக்கி உடல் உரசி நனைந்தோம் !
சில பல நிமிடங்களில் மழை விட்டது,
ஆனால் அவள் உடல் நடுக்கம் விடவில்லை,
மழையில் நனைந்த வெண்புறாவாய் அவள்,
அந்நடுக்கத்தை ரிக்டர் ஸ்கேலில் அதிகமாக்க அவள் இடையில்
செய்தேன் விரல் விளையாடல்,
அன்று அவள் துள்ளி அணைத்தது இன்றளவும் என் தேகம் சொல்லும் !
அன்று வீட்டிற்குச் சென்ற பின்னும் அவள் நினைவுதான்...

*அதே மழைக்காலம்,
இடிபோன்ற ஒருத் தகவல்,
அவள் இடி தாக்கி உயிரிழந்தாள் என்று,
பேரிடி என் வாழ்விலும்.

*ஆயிற்று ஓராண்டு,
இயந்திரமாய் உணர்ச்சியற்ற நான்,
எண்ண அலைகள் இல்லாமல் என் மனக் கடல்,
இன்னும் மழை விடவில்லை,
இந்த முதல் மழைக்கும் எனக்கும் என்னத் தொடர்போ,
போன வருடத்திற்கும் முந்தைய முதல் மழையில்தான்
அடையாரின் ஏதோ ஓர் வீதியில்,
தன் புடவையின் தலைப்பால்
தலை மறைத்து,
என் பைக் மறைத்து,
லிப்ட் கேட்டாள்,
அன்று அவள் வீட்டில் விட்டு,
மொபைல் நம்பர் பரிமாற்றிக் கொண்டு,
பிள்ளையார்சுழி போட்டுக் கொண்டது எம் உறவு...

*என் எண்ணங்களை கலைத்து,
நான் கேட்ட பாடலின் ஒலியையும் மீறி ஒலித்தது
எங்கோ விழுந்த இடியின் ஒலி,
என் மனம் அதன் சயனத்தில் இருந்து விடுபட்டது,
கொந்தளித்தது, கோவப்பட்டது - கடவுளிடம் -
அது இடிக்காக, அவள் மரணத்திற்காக அல்ல,
என்னை அந்த இடி விழுந்த இடத்தில் இடாததற்காக !

*மீண்டும் கடலைப் பார்த்தேன்,
அதன் சயனமும் கலைந்து கொந்தளித்துக் கொண்டிருந்தது,
பேரலைகள்,
பாவம் - அது யாரை இழந்ததோ !

Monday, April 27, 2009

மோட்சம் அடைந்தவை !


உன் விரல் பட்டதனால் பேனாவும்,
உன் கைப் பட்டதனால் டேபிளும்,
உன் கால் பட்டதினால் உன் செருப்பும்,
உன் உடல் பட்டதினால் உன் உடையும்,
மோட்சம் அடைந்தன என்று,
ஆழ்ந்த மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன் ! ! !

Wednesday, April 15, 2009

என் கவிதையின் கருவே...



என் கவிதையின் கருவே...
என் உணர்வுகளின் உருவே...
என் கற்பனைகளின் கற்பகத் தருவே...
தெரியுமா உனக்கு,
இந்தக் கவிதைகள் உன்மேல் பாடப்பட்டவை என்று?
படித்தவரெல்லாம் கேட்டார்கள்,
யார் அவள் என்று?
ஏன் நீயே ஒரு முறை கேட்டாய்
"யாரு அருண் அந்த பொண்ணு?"
என் புன்னகையால் அக்கேள்வியைப் புறந்தள்ளினேன்...!

உயிரே உனக்குத் தெரியுமா,
இவை உன் கவிதைகள் என்று..?
ஆம் தந்தையால் மட்டும் குழந்தை உண்டாக்க முடியாது,
என் கவிதைகளின் தாய் நீ..!


பிறரால், அதைப் படிக்கும்போது
சில இடங்கள் புரியாமல் இருக்கும்,
புரியாதவர்களுக்கு புரியாதிருந்தால் பரவாயில்லை
உனக்கு புரியவில்லையென்றால்?

ஆனால் உனக்கு நன்கு புரியும் என்று நம்புகிறேன்,
ஏனெனில் உன்னோடு நானிருந்த ஒவ்வொரு கனமும்,
இதோ செதுக்கி வைத்துள்ளேன் கவி வடிவில்..!

இவற்றை நீ படிக்கும்பொழுது அச்சம்பவங்கள் உன் நினைவில் வந்தால்,
அப்பொழுது சொல்லிக்கொள்வேன் நான்கவிஞன் என்று,
ஆனால் நீ படித்து அவள் யாரென்றால்
மீண்டும் புன்னகைப்பேன்,
புரிந்துக்கொள்..!

Wednesday, April 8, 2009

கா.மு / கா.பி ...



காதலிக்கும் முன்...

எட்டு மணிவரை தூக்கம்,
எடுப்பு சாப்பாடு,
குளிக்காத நாட்கள்,
shave செய்யாத முகம்,
எந்தக் கவலையும் இல்லாத மனம்,
ஜஸ்ட் பாஸ் கேஸ்,
தண்ணியாக செலவழித்த பணம்,
கனவில் ஐஸ்வர்யா ராய்,
பெண்கள் என்றால் அலட்சியம்,
அளவில்லாத வெட்டி பேச்சு,
ஏடாகூடா உடை,
கலைந்த தலைமுடி,
மூக்கின் மேல் கோவம்,
சண்டே சினிமா,
காதல் காட்சியா ரிமோட் எங்கே?,
எல்லாவற்றிற்க்கும் மேல் நானாகிய நான்,
இவைதான் என் அடையாளங்கள் !



காதலித்த பின்...
உறங்காத இரவுகள் (என் தலையணை சொல்லும்),
பாதி நாட்கள் விரதம் (நீ வேண்டி),
இருமுறை குளியல் (உன் அருகே வர),
தினமும் shaving (உன் கலரை மேட்ச் செய்ய),
டைடானிக்கே மூழ்கிய மனம் (உன் நினைவில்),
படிப்பில் கவனம் (உனக்காக சம்பாதிக்க),
கஞ்சனாக மாறினேன் (உனக்கு கால் பண்ண),
தூங்கினால்தானே கனவு வர (அதிலும் நீ),
பெண்கள் என் சகோதரிகள் (உன்னை தவிர),
ஊமையாகிய என் வாய் (நீ பேசாதபோது),
கவனமான உடுப்பு (உன்னோடு இருக்க),
கோவம் என்றால்? (புல்லைத் தின்னும் புலி),
70mmல் உன் முகம் (சினிமா எதற்கு),
காதல் காட்சியா வால்யூம் ஏத்து (திரையில் நாம்),
உன்னில் பாதியாகிய நான்,
யார் என்னை மாற்றியது ???

Monday, March 16, 2009

நாம் பிரிந்த நாளில்...


உணர்சிவயத்தில் பிரிந்ததாகத்தான் நினைத்தேன் முதலில்,
ஆனால் என் மனம் கல்லானது ஏன்?
நிற்க...!

இதோ ஏன் வாக்குமுலம்...

நாம் பிரிந்த நாளில்...
மனதில் ஒரு vaccum,
என் செரபுஞ்சி, சகாரா வானது,
என் கரையை அலைகள் தொடவில்லை,
என் கிழக்கில் சூரியன் உதிக்கவில்லை,
என் சிக்னலில் மட்டும் நிரந்தர சிகப்பு,
என் வானின் நூறு நிலாக்களை காணவில்லை,
என் மின்மினிப்பூச்சிகளிடம் ஏனோ powercut,
எனது Razorக்கு கொடுத்துவிட்டேன் V.R.S,

அமாவாசைகள் மட்டுமே என் இரவுகள் ஆனது,
நான் பேச யாரோ டப்பிங்,
பசியில்லாத நான்,
காற்றுக்குக்கூட Moodout வீசவில்லை,
நெருப்பிற்கே நம் பிரிவு சுடுகிறதாம்,
தண்ணீர் அழுகிறதோ, கரிக்கிறது,

சொல்லித் தெரிவதில்லை பிரிவின் கொடுமை,
சுபம் ... !