என் கல்லூரி காலத்தில் நான் எனக்குள் கண்டு எடுத்த மற்றொரு அருண், நிறைய கவிதைகள் இங்கு இலக்கணம் மீறியவையாய் இருக்கும், இருப்பினும் எழுதுவோம்...
Tuesday, December 30, 2008
இயற்கை எழில் ! ! !
* அன்றொரு நாள்,
தலைவி தலைவனை நினைத்து புன்னை மர நிழலில் புலம்பினாள்;
இன்றைய தலைவி,
புலம்ப புன்னை மரமும் இல்லை,
நல்லதொரு தலைவனும் இல்லை !
* அன்றொரு நாள்,
சகுந்தலை ஒடமிடும்பொழுது துஷ்யந்தனை சந்தித்தாள்;
இன்றைய சகுந்தலை,
குடிக்க ஒரு குவளை நீர் கூட இல்லை !
* அன்றொரு நாள்,
சீதை கருமரங்கள் நிறைந்த அசொகவனத்தில் சிறை இருந்தாள்;
இன்றைய சீதையை
சிறைபடுத்துவது வாகனப் புகையால் வந்த ஆஸ்துமா !
* அன்றோரு நாள்,
ஜடாயுவும், சுக்ரீவனும் இருந்தன மானிட நண்பர்களாய்;
இன்றைய ஜடாயுவும், சுக்ரீவனும்
இருக்கின்றன மானிட நண்பர்களாய் கூண்டினுள்ளே !
* அன்றொரு நாள்,
இயற்கை எழிலுக்கு உவமையாய் பாரதக் கண்டம்;
இன்றைய பாரதக் கண்டத்தில்,
உவமைக் கேள்வியாய், "இயற்கை எனில்???" !!!
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
Great you have very clearly
compared those days with
todays situation.
And beatifully said about todays life.
nandri hein...
One of a kind, paarthapothu vungalai patri yen kanippu veru. vungal kavithaikalai vaasikkumpothu thonruvathu veru. vunmayil erandilum kalakkukinreergal. thodarattum vungal kalakkalkal. Really touching.
@ Mayilkalai
One of a kind parthu en meethu thappana apiprayam varaamal irunthal sari :P :P
nandri varugaikku meendum varuga...
Post a Comment