என் கல்லூரி காலத்தில் நான் எனக்குள் கண்டு எடுத்த மற்றொரு அருண், நிறைய கவிதைகள் இங்கு இலக்கணம் மீறியவையாய் இருக்கும், இருப்பினும் எழுதுவோம்...
Friday, February 13, 2009
முதல் சந்திப்பு...
வெண்தாமரை நீ கைகுலுக்க
சூரியன் நான் சந்திரனாய் குளிர்ந்தேன் !
உன் பெயரை மறுபடி கேட்ட பொழுது
நீ எண்ணியிருபாய் என் காது மந்தம் என்று,
பாவம் உனக்கெப்படி தெரியும்
உன் பெயரின் சுவையை என் செவிகள் மறக்க முடியாமல் துடித்ததை !
பட்டிமன்றமே நடத்தலாம்,
உன் பெயர் இயற்கையிலேயே இனிமையா ?
அல்லது உன் இதழ் பட்டதினால் இனிமையா என்று ! ! !
உன் பெயர்,
பெயரா அது?காதல் அகராதி,
ஒரு சொல்லில் இத்தனை பொருளா ?
சங்கின் இனிய நாதம், அது ஒலிக்கும்போது !
உன் தாய்க்கும் தந்தைக்கும்,
நாக்கில் பனி,
தேன் உறைந்து அவர்கள் நாவாக மாறியதோ ???
உன் உடல்,
மீண்டும் உன் தாய்க்கும் தந்தைக்கும்,
நன்றி ... இல்லை ... இல்லை ...
உன் மூதாதையர்களுக்கும் நன்றி,
அவர்களின் மரபணுக்களுக்கும் நன்றி,
மரபணு மாற்றம் என்ற அற்புதத்தைப் படைத்த கடவுளுக்கும் நன்றி !!!
காற்றைப்போல் மெல்லிய தேகம்,
நீரைபோல் ஓடும் இளமை,
புவிஈர்ப்புவிசையுடன் நிலமாகிய கண்கள்,
நெருப்பாகிய உன் பெண்மை,
ஆகாயம் அளவு உன் அழகு,
பஞ்ச பூதத்தில் மனிதன் அடக்கம்,
அதனால்தான் உன்னுள் நானோ ???
எனக்குள் சக்தி இருந்திருந்தால் நாம்
பிரியாமல் பார்த்தது பார்த்தப்படி செய்திருப்பேன் !
அந்த நொடி மாறாதவாரு
அனைத்து கடிகாரங்களையும் நிறுத்தியிருப்பேன் !
விடு... உன்னை யார் என்னுள் இருந்து பிரித்துவிட முடியும் ?
நீ எனைப் பிரிய முனைந்த போது
யுக முடிவோ என்று நினைத்தேன்,
ஆனால் மீண்டும் உன்னை சுவாசிக்க
யுக மரணத்தை சிறிது தள்ளிபோட்டேன் !
நாம் மீண்டும் இணைவோம் என்ற
நம்பிக்கையுடன் பிரிந்தேன் !!!
எதை பற்றி
காதல்
Subscribe to:
Post Comments (Atom)
18 comments:
me the first?
மதி பிறழ்ந்து எத்துனை மாதங்களாகின்றன?
he he he...yes...
//
உன்னை யார் என்னுள் இருந்து பிரித்துவிட முடியும் ?
//
நல்லா வருவீங்க தம்பி.. உங்க கிட்ட இருந்து இன்னும் அதிகமா எதிர் பார்க்கிறேன். லாக் அவுட் பண்றதுக்கு முன்னாடி எங்க கடைக்கு வந்து ஒரு பத்து ஹிட் கவுண்ட் ஒரு அஞ்சு பின்னூட்டம் போடுங்க.. பாக்க்லாம் பா :))))
nandri ayya... :P :P :P
pottutaa pochu...
என்ன சொல்லறதுன்னே தெரியலை.காதலர் தினத்துக்கு முன்னாடி இப்படி ஒரு கவிதையா? காதலிக்கு சமர்ப்பித்தாச்சா???
யாரந்த அதிர்ஷ்ட தேவதை?
@ Vijay anna
nandri...and intha kavithaigal ellam 4 varudathukku munndai eluthunathu...
appo lovela villuvalla...love la vilunthu 10 maasam than aachu, athulernthu kavithai eluthaa varalla :P...enna ponnuku tamil theriyadhu :P
//enna ponnuku tamil theriyadhu :P//
ponnuku tamizha terilaina enna..neenga avanga bashaila itha translate pani solidunga :)
//உன் தாய்க்கும் தந்தைக்கும்,
நாக்கில் பனி,
தேன் உறைந்து அவர்கள் நாவாக மாறியதோ ??//
avvvvvvvvvvv....soooper lines
@ gils...
he he he ippo than avanga mozhiya naan kathukittu iruken namma tamila avanga kathukittu irukaanga..so enga rendu perukkum pothuvanna english mozhila solliten...
@ gils
nandri
NAAKIL SANI
endra linea konjam mathi eluthinen avlothan...
Unga avalukku Tamizh teriyaama Poochae :)
Romba Rasichu Ezhudirkeenga. Sila varigal Nitharsanathula rasikanum Pola irukku:-)
Innum neraya ezhudunga dubaakur vakeel sir:P
@ Pan
ennaku avangal irukkangala ennane therila maaa :P :P :P...ennodaa aval karpanaiyanavalaavum irukkalam la :P :P: P
@ Arc
nandri for the rest of the comments and wava wava waeeeeeeeeeee for the last line...
\\விடு... உன்னை யார் என்னுள் இருந்து பிரித்துவிட முடியும் ?\\
மிக அழகு நண்பரே ...
nandri anna
dai ippo enna solla wara?
@ Akila
neeyum antha K vum meet panna tha pathi solren :P
Post a Comment