என் கவிதையின் கருவே...
என் உணர்வுகளின் உருவே...
என் கற்பனைகளின் கற்பகத் தருவே...
தெரியுமா உனக்கு,
இந்தக் கவிதைகள் உன்மேல் பாடப்பட்டவை என்று?
படித்தவரெல்லாம் கேட்டார்கள்,
யார் அவள் என்று?
ஏன் நீயே ஒரு முறை கேட்டாய்
"யாரு அருண் அந்த பொண்ணு?"
என் புன்னகையால் அக்கேள்வியைப் புறந்தள்ளினேன்...!
உயிரே உனக்குத் தெரியுமா,
இவை உன் கவிதைகள் என்று..?
ஆம் தந்தையால் மட்டும் குழந்தை உண்டாக்க முடியாது,
என் கவிதைகளின் தாய் நீ..!
பிறரால், அதைப் படிக்கும்போது
சில இடங்கள் புரியாமல் இருக்கும்,
புரியாதவர்களுக்கு புரியாதிருந்தால் பரவாயில்லை
உனக்கு புரியவில்லையென்றால்?
ஆனால் உனக்கு நன்கு புரியும் என்று நம்புகிறேன்,
ஏனெனில் உன்னோடு நானிருந்த ஒவ்வொரு கனமும்,
இதோ செதுக்கி வைத்துள்ளேன் கவி வடிவில்..!
இவற்றை நீ படிக்கும்பொழுது அச்சம்பவங்கள் உன் நினைவில் வந்தால்,
அப்பொழுது சொல்லிக்கொள்வேன் நான்கவிஞன் என்று,
ஆனால் நீ படித்து அவள் யாரென்றால்
மீண்டும் புன்னகைப்பேன்,
புரிந்துக்கொள்..!