மௌனமாய் இருப்பதனால் மெண்மை என்பதாகாது,
தலையை அசைபதனால் தத்தி என்று ஆகாது,
கோழைக்கும் கோபம் உண்டு,
உண்மையில் கோழையே வீரன் தன் பயம் அவனுக்கு தெரியும்,
வீரனை விலங்கிடும், சூழல் விலங்கின் திறம் கம்மி
மிரண்டால் சிதறிடும் விலங்குகள் எட்டுத்திக்கும்,
வீரனுக்கு தேவை திடம் மட்டுமே,
தன் சொந்தக் காலில் நிற்பானவன்,
தலை வணங்க மாட்டான், கால் பிடிக்க மாட்டான்,
அடித்தால் நெற்றியடிதான், புறமுதுகு காண்பித்தால் அது உன் கேடு !
எத்தனைக் காலம்தான் கோழைபோல் நடிப்பது?
உண்மையை அறிந்தால் நீ இங்கு அழிவாய்,
என் கல்லறைக்கு என்றோ இடம் பார்த்துவிட்டேன்,
மரணத்திடம் எனக்கு பயமில்லை, அதற்கே என்னிடம் பயம் !
சொந்தக்காலில் நிற்பதனால் கிழே விழுந்தால் அடி அதிகமில்லை,
அப்பன் தோளில் நிற்கும் நீ கிழே விழுந்தால் அடி அதிகம் !
நீ செல்வாய் தனியாக,
நான் செல்வேன் தனியாக,
பிறந்திடும்போது இருவருமே நிர்வாணம்தான்,
இதை நீ உணராவிட்டால் வாழ்க்கையே நிர்மூலம்தான் !
சொல்வதைச் சொல்லிவிட்டேன் மற்றவை உன் கையில்.
உடம்பினில் ஈரமிருந்து யாருக்கும் பயனில்லை,
மனதினில் ஈரமுள்ள எனக்கிங்கு மரணமில்லை,
சுடுகாட்டில் ஆடுகின்ற அந்த ஆதிசிவன் நான்தானே,
மண்டையோடும் சாம்பலும்தான் எனதுடமை,
புரிந்து நீ வழிவிடு,
இல்லையேல் உயிர்விடு !
என் கல்லூரி காலத்தில் நான் எனக்குள் கண்டு எடுத்த மற்றொரு அருண், நிறைய கவிதைகள் இங்கு இலக்கணம் மீறியவையாய் இருக்கும், இருப்பினும் எழுதுவோம்...
Showing posts with label சமூகம். Show all posts
Showing posts with label சமூகம். Show all posts
Saturday, September 4, 2010
Monday, February 16, 2009
வயது ! ! !

வயதினால் வருதலா அறிவு?
மூத்தவர் புத்திமான் என்ற பேதம்
கிடையாது என்று புகட்டினான் வேதம்
திருஞானசம்பந்தனும் அப்பருக்கே... !
Tuesday, December 30, 2008
இயற்கை எழில் ! ! !

* அன்றொரு நாள்,
தலைவி தலைவனை நினைத்து புன்னை மர நிழலில் புலம்பினாள்;
இன்றைய தலைவி,
புலம்ப புன்னை மரமும் இல்லை,
நல்லதொரு தலைவனும் இல்லை !
* அன்றொரு நாள்,
சகுந்தலை ஒடமிடும்பொழுது துஷ்யந்தனை சந்தித்தாள்;
இன்றைய சகுந்தலை,
குடிக்க ஒரு குவளை நீர் கூட இல்லை !
* அன்றொரு நாள்,
சீதை கருமரங்கள் நிறைந்த அசொகவனத்தில் சிறை இருந்தாள்;
இன்றைய சீதையை
சிறைபடுத்துவது வாகனப் புகையால் வந்த ஆஸ்துமா !
* அன்றோரு நாள்,
ஜடாயுவும், சுக்ரீவனும் இருந்தன மானிட நண்பர்களாய்;
இன்றைய ஜடாயுவும், சுக்ரீவனும்
இருக்கின்றன மானிட நண்பர்களாய் கூண்டினுள்ளே !

* அன்றொரு நாள்,
இயற்கை எழிலுக்கு உவமையாய் பாரதக் கண்டம்;
இன்றைய பாரதக் கண்டத்தில்,
உவமைக் கேள்வியாய், "இயற்கை எனில்???" !!!
Friday, December 19, 2008
சுனாமி என்ற எனிமி ! ! !
சுனாமி என்னும் ஆழி பேரலை என் புகுந்த வீடான சென்னை பட்டினத்தை தாகிய பொழுது எழுதிய வரிகள்...
சுனாமி, எங்களின் எனிமியே !
* இரண்டு தாய்களுக்கு இடையே சச்சரவு,
பூமி குலுங்கி விட்டு நின்றது ஆனால்
கடலே உனக்கு மட்டும் ஏன்
மாற்றாந்தாய் முகம்?
ஒன்றுக்கு இரண்டு அம்மாக்கள்
இருந்தும் உயிரை எடுத்துவிட்டீர்களே !

* பசிக்கிறது என்று சொல்லி இருந்தால்,
உணவிட்டிருப்போம் !
இப்படி பில் பே பண்ணாமல் பல
உயிர்களை உண்டு விட்டாயே ?
சாமியென்றால் சைவம் என்று
நினைத்திருந்தோம் ஆனால் நீ
அசைவம் உண்டு ஆசாமி ஆகிவிட்டாய் !
* காற்று வாங்கதானே வந்தார்கள்,
உன்னை யார் காற்றை எடுக்க சொன்னது ?

* கிரிக்கெட் விளையாடியவர்களை ஆல் ஔட்
செய்த உனக்கு என்ன பெரிய
கும்ப்ளே என்ற நினைப்பா ?
* சீரியல் கில்லர் கூட GAP விட்டு கொல்வான்,
நீ எந்த வகை கில்லர் ஸீ ஷோர் கில்லரா ?
* வாக்கிங் என்றால் இரண்டு கால்தானே,
அவர்களுக்கு நடக்க தெரியாதா ?
நீ ஏன் அவர்களை எட்டுக்கால்கள்
தூக்க வைத்தாய் ?
*உப்பிய உடல்களை துப்பிய உன்னை
அன்னை என்று எப்படி அழைப்பது ?
*உன்னிடம் தான் நிறைய உப்பு நீர் உள்ளதே,
ஏன் எங்கள் கண்களிலும் வர வைத்தாய் ?
*பூமி மட்டுமா எங்கள் தாய்,
நீயும் தாய்தானே ஏன் பேயானாய் ?
*ஆனாலும் தமிழர்களின் விருந்தோம்பல்
சற்று OVER DOSE தான்,
அழையா விருந்தாளியான உனக்கு
ஆயிரக்கணக்கில் உணவிட்டுவிட்டார்கள் !
* இதோடாவது பசியைத் தணித்துக்கொள்,
இல்லை யாரும் இல்லது தனிமையில்
கொந்தளிப்பாய் !
*மணல் வீடுகளை களைத்திருந்தால்
பரவாயில்லை ஆனால் நீ பல
மன(ம்) வீடுகளை களைத்துவிட்டாய் !

*உன்னை ஊரைவிட்டு ஒதுக்கி
வைக்க நாட்டாமைகள் கூட
உயிரோடு இல்லை !
நீ எப்படி வேண்டுமானாலும் இரு
ஆனால் உன் எல்லைக்குள் இரு !!!
சுனாமி, எங்களின் எனிமியே !
* இரண்டு தாய்களுக்கு இடையே சச்சரவு,
பூமி குலுங்கி விட்டு நின்றது ஆனால்
கடலே உனக்கு மட்டும் ஏன்
மாற்றாந்தாய் முகம்?
ஒன்றுக்கு இரண்டு அம்மாக்கள்
இருந்தும் உயிரை எடுத்துவிட்டீர்களே !

* பசிக்கிறது என்று சொல்லி இருந்தால்,
உணவிட்டிருப்போம் !
இப்படி பில் பே பண்ணாமல் பல
உயிர்களை உண்டு விட்டாயே ?
சாமியென்றால் சைவம் என்று
நினைத்திருந்தோம் ஆனால் நீ
அசைவம் உண்டு ஆசாமி ஆகிவிட்டாய் !
* காற்று வாங்கதானே வந்தார்கள்,
உன்னை யார் காற்றை எடுக்க சொன்னது ?

* கிரிக்கெட் விளையாடியவர்களை ஆல் ஔட்
செய்த உனக்கு என்ன பெரிய
கும்ப்ளே என்ற நினைப்பா ?
* சீரியல் கில்லர் கூட GAP விட்டு கொல்வான்,
நீ எந்த வகை கில்லர் ஸீ ஷோர் கில்லரா ?
* வாக்கிங் என்றால் இரண்டு கால்தானே,
அவர்களுக்கு நடக்க தெரியாதா ?
நீ ஏன் அவர்களை எட்டுக்கால்கள்
தூக்க வைத்தாய் ?
*உப்பிய உடல்களை துப்பிய உன்னை
அன்னை என்று எப்படி அழைப்பது ?
*உன்னிடம் தான் நிறைய உப்பு நீர் உள்ளதே,
ஏன் எங்கள் கண்களிலும் வர வைத்தாய் ?
*பூமி மட்டுமா எங்கள் தாய்,
நீயும் தாய்தானே ஏன் பேயானாய் ?
*ஆனாலும் தமிழர்களின் விருந்தோம்பல்
சற்று OVER DOSE தான்,
அழையா விருந்தாளியான உனக்கு
ஆயிரக்கணக்கில் உணவிட்டுவிட்டார்கள் !
* இதோடாவது பசியைத் தணித்துக்கொள்,
இல்லை யாரும் இல்லது தனிமையில்
கொந்தளிப்பாய் !
*மணல் வீடுகளை களைத்திருந்தால்
பரவாயில்லை ஆனால் நீ பல
மன(ம்) வீடுகளை களைத்துவிட்டாய் !

*உன்னை ஊரைவிட்டு ஒதுக்கி
வைக்க நாட்டாமைகள் கூட
உயிரோடு இல்லை !
நீ எப்படி வேண்டுமானாலும் இரு
ஆனால் உன் எல்லைக்குள் இரு !!!
Friday, December 5, 2008
வெயில் சோறு

I am writing a poem after a long time. This is dedicated to all the workers irrespective of their race and country who works in a different nation just to make sure that their family should eat three meals a day...
மணி இரண்டு, என் கையில் இருந்த திப்பின் பாக்ஸ் மண்டையில் அடிக்கும் வெயில் போலவே சுடுகிறது,
சென்ற முறை ஊர் சென்ற பொழுது அரசாங்க மருத்துவமனையில்
"உனக்கு அல்ஸர் உள்ளது சரியான நேரத்தில் உண்ண வேண்டும்" என்று சொன்னதாக ஞாபகம்.
மூடியை திறந்தேன், ராமசாமி செய்த சோறு
அவன் தலை முடியை போலவே காய்ந்து போய் இருந்தது கண்டிப்பாக விக்கல் வரும்.
அதர்க்கு ஊற்றிக்கொள்ள சிகப்புத் தண்ணீர், அதை வைத்த ஹகீமை கேட்டால் ரசம் என்பான்,
நான் வைக்கும் சாம்பார கிண்டல் செய்வான், அதனால் அவனை கேட்கவில்லை.
தொட்டுக்கொள்ள அந்தோனி வைத்த உருளைக்கிழங்கு,
அவனுக்கு எத்தனை முறை சொன்னாலும் தோள் உரித்து வெட்டி வேக வைக்க மாட்டான்,
சரியான உருளைக்கிழங்கு சோம்பேறி, அது க்ரிகெட் பந்தை விட கடினமாக இருந்தது.
இன்று எனக்கு சமையல் வேலை இல்லை,
காலையில் எழுந்து சமைய்ப்பது போன்ற ஒரு கொடுமை வேறு எதுவும் இல்லை.
சீக்கிரம் சாப்பிட வேணும் இல்லாட்டி அந்த ஸூபர்வைஸர் திட்டுவான்,
தேவை இல்லாமல் என் அம்மாவை அசிங்க படுத்துவான்,
எதுவும் சொல்ல முடியாது, ஊருக்கு போறதுக்கு முன்னாடி இருக்குடா உனக்கு...
முதல் வாய் எடுத்து வைத்தேன், என்ன பொழப்பு டா சாமி இது
கண்ணீர் முட்டியது, காலையில் இருந்து ஒரு வாய் கூட சாப்பிடள
அம்மா இருந்து இருந்தா இப்படி ஆகும்மா?
ஹ்ம்ம்ம் அந்த அம்மா இருக்கணும்னு தானே இந்த பொழப்பு, இருதய நோயாளி.
சரி இப்பொழுது இதை தின்ன என்ன வழி,
ரசத்தை மீண்டும் பார்த்தேன் சிகப்புத் தண்ணீர்,
இதை நான் சோற்றில் உற்றாவிட்டால்
என் தங்கைக்கு மஞ்சள் நீர் உற்றா முடியாது
உருளைக்கிழங்கை நான் தின்ணாவிட்டால்
என் தம்பி பந்து விளையாட முடியாது.
கிராமத்தில் நிலா சோறு தின்று உள்ளேன்,
சித்திர பௌர்ணமி அன்று குடும்ப ஓததுமைக்காக அம்மா
சாதம் ஊட்டி விடுவாள், அப்படி செய்தால் குடும்பம் செழிக்கும் என்பாள்
இதோ இன்று நான் உண்பது வெயில் சோறு
ஊரில் உள்ள என் குடும்பம் மூன்று வேலை சோறு தின்ன வேண்டும் என்பதற்காக !!!
மீண்டும் விக்கல் ஆனால் அதில் ஒரு இன்பம்...
Subscribe to:
Posts (Atom)

