Friday, July 17, 2009

முதல் மழை...

* அந்திப் பொழுது,
என் வீட்டு ஜன்னல் ஓரத்தில் அமர்ந்திருந்தேன்,
கையில் தட்டு நிறைய மனித குலத்தை பாவக் குழியில் தள்ளிய பழத்துண்டுகள் !
காதில் கையடக்க ஒலிப்பெருக்கி (அல்லது ஒலிக்குறுக்கியா?)
எனக்கு பிடித்த பாடல்கள் iPodல்இருந்து !
கண்கள் நீலக்கடலை நோக்கி,
ஏனோ கடல் அமைதியாக இருந்தது,
சலனமின்றி என் மனதைப்போல் !

* மதியம் கேட்ட வானிலை அறிக்கை மனதில் ஒலித்தது,
"வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் -
தமிழ்நாட்டில் பருவமழை ஆரம்பம்"
என் உதட்டின் ஓரம் ஏளனச் சிரிப்பு,
எனக்கும் கடலுக்கும் உள்ள ஒற்றுமைகள் எண்ணி,
அதற்கு காற்றழுத்தம்,
எனக்கு மன அழுத்தம் !

*வானம் கருத்தது,
கடிகாரத்தில் மணி நான்கு
ஆனால் ஏழு மணி இருட்டு !
தொலைவில் ஒரு மாடியில் உலர்த்திய துணிகளை அவசரமாக எடுத்துக்கொண்டு இருந்தால் ஒரு பெண்;
எனக்குக் குட அந்த துணிகள் போல் என் மனக்கவலைகளை கழட்டி உலர்த்த ஆசைதான் !

*என் பைக்கில் ஏதோ விழுந்தது போல் இருந்தது,
என்ன என்று பார்பதற்குள் விடை கிடைத்தது,
இந்த வருடத்தின் முதல் மழை, பெருந்துளிகளாய் பூமியை ஈரமாகியது,
என் காய்ந்துப்போகாத நினைவுகளையும்தான் !

* சென்ற வருடத்தின் முதல் மழை,
நானும் என்னவளும் இதே மெரினா கரையோரம்,
நடைபயிலும்போது கையில் குடையின்றி,
அவளது துப்பட்டாவை தலைமறையாக்கி உடல் உரசி நனைந்தோம் !
சில பல நிமிடங்களில் மழை விட்டது,
ஆனால் அவள் உடல் நடுக்கம் விடவில்லை,
மழையில் நனைந்த வெண்புறாவாய் அவள்,
அந்நடுக்கத்தை ரிக்டர் ஸ்கேலில் அதிகமாக்க அவள் இடையில்
செய்தேன் விரல் விளையாடல்,
அன்று அவள் துள்ளி அணைத்தது இன்றளவும் என் தேகம் சொல்லும் !
அன்று வீட்டிற்குச் சென்ற பின்னும் அவள் நினைவுதான்...

*அதே மழைக்காலம்,
இடிபோன்ற ஒருத் தகவல்,
அவள் இடி தாக்கி உயிரிழந்தாள் என்று,
பேரிடி என் வாழ்விலும்.

*ஆயிற்று ஓராண்டு,
இயந்திரமாய் உணர்ச்சியற்ற நான்,
எண்ண அலைகள் இல்லாமல் என் மனக் கடல்,
இன்னும் மழை விடவில்லை,
இந்த முதல் மழைக்கும் எனக்கும் என்னத் தொடர்போ,
போன வருடத்திற்கும் முந்தைய முதல் மழையில்தான்
அடையாரின் ஏதோ ஓர் வீதியில்,
தன் புடவையின் தலைப்பால்
தலை மறைத்து,
என் பைக் மறைத்து,
லிப்ட் கேட்டாள்,
அன்று அவள் வீட்டில் விட்டு,
மொபைல் நம்பர் பரிமாற்றிக் கொண்டு,
பிள்ளையார்சுழி போட்டுக் கொண்டது எம் உறவு...

*என் எண்ணங்களை கலைத்து,
நான் கேட்ட பாடலின் ஒலியையும் மீறி ஒலித்தது
எங்கோ விழுந்த இடியின் ஒலி,
என் மனம் அதன் சயனத்தில் இருந்து விடுபட்டது,
கொந்தளித்தது, கோவப்பட்டது - கடவுளிடம் -
அது இடிக்காக, அவள் மரணத்திற்காக அல்ல,
என்னை அந்த இடி விழுந்த இடத்தில் இடாததற்காக !

*மீண்டும் கடலைப் பார்த்தேன்,
அதன் சயனமும் கலைந்து கொந்தளித்துக் கொண்டிருந்தது,
பேரலைகள்,
பாவம் - அது யாரை இழந்ததோ !

Monday, April 27, 2009

மோட்சம் அடைந்தவை !


உன் விரல் பட்டதனால் பேனாவும்,
உன் கைப் பட்டதனால் டேபிளும்,
உன் கால் பட்டதினால் உன் செருப்பும்,
உன் உடல் பட்டதினால் உன் உடையும்,
மோட்சம் அடைந்தன என்று,
ஆழ்ந்த மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன் ! ! !

Wednesday, April 15, 2009

என் கவிதையின் கருவே...என் கவிதையின் கருவே...
என் உணர்வுகளின் உருவே...
என் கற்பனைகளின் கற்பகத் தருவே...
தெரியுமா உனக்கு,
இந்தக் கவிதைகள் உன்மேல் பாடப்பட்டவை என்று?
படித்தவரெல்லாம் கேட்டார்கள்,
யார் அவள் என்று?
ஏன் நீயே ஒரு முறை கேட்டாய்
"யாரு அருண் அந்த பொண்ணு?"
என் புன்னகையால் அக்கேள்வியைப் புறந்தள்ளினேன்...!

உயிரே உனக்குத் தெரியுமா,
இவை உன் கவிதைகள் என்று..?
ஆம் தந்தையால் மட்டும் குழந்தை உண்டாக்க முடியாது,
என் கவிதைகளின் தாய் நீ..!


பிறரால், அதைப் படிக்கும்போது
சில இடங்கள் புரியாமல் இருக்கும்,
புரியாதவர்களுக்கு புரியாதிருந்தால் பரவாயில்லை
உனக்கு புரியவில்லையென்றால்?

ஆனால் உனக்கு நன்கு புரியும் என்று நம்புகிறேன்,
ஏனெனில் உன்னோடு நானிருந்த ஒவ்வொரு கனமும்,
இதோ செதுக்கி வைத்துள்ளேன் கவி வடிவில்..!

இவற்றை நீ படிக்கும்பொழுது அச்சம்பவங்கள் உன் நினைவில் வந்தால்,
அப்பொழுது சொல்லிக்கொள்வேன் நான்கவிஞன் என்று,
ஆனால் நீ படித்து அவள் யாரென்றால்
மீண்டும் புன்னகைப்பேன்,
புரிந்துக்கொள்..!

Wednesday, April 8, 2009

கா.மு / கா.பி ...காதலிக்கும் முன்...

எட்டு மணிவரை தூக்கம்,
எடுப்பு சாப்பாடு,
குளிக்காத நாட்கள்,
shave செய்யாத முகம்,
எந்தக் கவலையும் இல்லாத மனம்,
ஜஸ்ட் பாஸ் கேஸ்,
தண்ணியாக செலவழித்த பணம்,
கனவில் ஐஸ்வர்யா ராய்,
பெண்கள் என்றால் அலட்சியம்,
அளவில்லாத வெட்டி பேச்சு,
ஏடாகூடா உடை,
கலைந்த தலைமுடி,
மூக்கின் மேல் கோவம்,
சண்டே சினிமா,
காதல் காட்சியா ரிமோட் எங்கே?,
எல்லாவற்றிற்க்கும் மேல் நானாகிய நான்,
இவைதான் என் அடையாளங்கள் !காதலித்த பின்...
உறங்காத இரவுகள் (என் தலையணை சொல்லும்),
பாதி நாட்கள் விரதம் (நீ வேண்டி),
இருமுறை குளியல் (உன் அருகே வர),
தினமும் shaving (உன் கலரை மேட்ச் செய்ய),
டைடானிக்கே மூழ்கிய மனம் (உன் நினைவில்),
படிப்பில் கவனம் (உனக்காக சம்பாதிக்க),
கஞ்சனாக மாறினேன் (உனக்கு கால் பண்ண),
தூங்கினால்தானே கனவு வர (அதிலும் நீ),
பெண்கள் என் சகோதரிகள் (உன்னை தவிர),
ஊமையாகிய என் வாய் (நீ பேசாதபோது),
கவனமான உடுப்பு (உன்னோடு இருக்க),
கோவம் என்றால்? (புல்லைத் தின்னும் புலி),
70mmல் உன் முகம் (சினிமா எதற்கு),
காதல் காட்சியா வால்யூம் ஏத்து (திரையில் நாம்),
உன்னில் பாதியாகிய நான்,
யார் என்னை மாற்றியது ???

Monday, March 16, 2009

நாம் பிரிந்த நாளில்...


உணர்சிவயத்தில் பிரிந்ததாகத்தான் நினைத்தேன் முதலில்,
ஆனால் என் மனம் கல்லானது ஏன்?
நிற்க...!

இதோ ஏன் வாக்குமுலம்...

நாம் பிரிந்த நாளில்...
மனதில் ஒரு vaccum,
என் செரபுஞ்சி, சகாரா வானது,
என் கரையை அலைகள் தொடவில்லை,
என் கிழக்கில் சூரியன் உதிக்கவில்லை,
என் சிக்னலில் மட்டும் நிரந்தர சிகப்பு,
என் வானின் நூறு நிலாக்களை காணவில்லை,
என் மின்மினிப்பூச்சிகளிடம் ஏனோ powercut,
எனது Razorக்கு கொடுத்துவிட்டேன் V.R.S,

அமாவாசைகள் மட்டுமே என் இரவுகள் ஆனது,
நான் பேச யாரோ டப்பிங்,
பசியில்லாத நான்,
காற்றுக்குக்கூட Moodout வீசவில்லை,
நெருப்பிற்கே நம் பிரிவு சுடுகிறதாம்,
தண்ணீர் அழுகிறதோ, கரிக்கிறது,

சொல்லித் தெரிவதில்லை பிரிவின் கொடுமை,
சுபம் ... !

Monday, March 2, 2009

ஊனம் ! ! !


நீ 'கூப்பிடு' என்றபோது
ஊமையாகிய என் செல்போனை கண்டபோதுதான்
தெரிந்தது ஊனத்தின் வலி ! ! !

Friday, February 27, 2009

பிடிச்சிருந்தா சிரிச்சிகோ !!!


* என் அம்மாவின் தம்பியோ,
என் அத்தையின் கணவரோ,
இல்லாமல்
எனக்கு 'மாமா'வாகிய உன் அப்பா . . . !

* என் அப்பாவின் தங்கையோ,
என் மாமாவின் மனைவியோ,
இல்லாமல்
எனக்கு 'அத்தை'யாகிய உன் அம்மா . . . !

* என் மாமா மகனோ,
என் அத்தை மகனோ,
இல்லாமல்
எனக்கு 'மச்சான்' ஆகிய உன் அண்ணன் . . . !

* எனக்கு இரத்த உறவோ,
உனக்கு இரத்த உறவோ,
இல்லாமல்
'காதலர்கள்' ஆகிய நாம் . . . !

* இன்னும் உறவின்றி இருப்பது,
நம் இரு வீட்டு நாய்கள் தான்,
அதனால் உடனே பதில் அனுப்பவும் . . . !

Monday, February 23, 2009

உன் கூந்தல்...என்னவாயிற்று தமிழ் அகராதிக்கு, அச்சில் பிழையா?
கருநிறம் - உன் கூந்தல்
அடர்த்தி - உன் கூந்தல்
மென்மை - உன் கூந்தல்
அலைபாயுதல் - உன் கூந்தல்
செழுமை - உன் கூந்தல்
பிணைதல் - உன் கூந்தல்
அழகு - உன் கூந்தல்
கார் மேகம் - உன் கூந்தல்
நள்ளிரவு - உன் கூந்தல்
அம்மாவாசை நிலவு - உன் கூந்தல்
கூந்தல்- உன் கூந்தல்
(போதும் இதற்கு மேல் எழுத கை வலிக்கிறது)
இத்தனை சொற்களுக்கும்,
பொருள் உன் கூந்தல் !
உவமை உன் கூந்தல் !
******
தமிழே வியந்தாலும்,
உன் கூந்தல் என்னை மயக்கவில்லை !

என்னை மயக்கியதெல்லாம்,
அங்கு உன் காது மடலில்,
ஒன்றும் தெரியாத குழந்தைப்போல்,
உன் விரலின் ஸ்பரிசத்தால் மயங்கி கிடக்கும்,
அந்த செவி ஓர கற்றை முடியில்தான் !

என்னவென்று சொல்வேன்,
அந்த முடி கற்றை ஆடும் ஆட்டத்தை,
காற்றால் எழுப்பப்பட்டு அது
உன் முகத்தில் மின்னலென விழுவதும்,
அதை உன் விரல் திரும்ப மயக்குவதும் !

நீ எனக்கு உன் மனதில் கூட இடம் ஒதுக்க வேண்டாம்,
அந்த செவி மடலில் ஒதுக்கு ஒரு இடம் ! ! !

Tuesday, February 17, 2009

என் ரயில் பயணங்கள்...


அன்றொரு நாள் ரயில் பயணங்கள் சுவையானவை,

கருப்புக்கோட்டு அங்கிள்,
துப்பாக்கி சார்,
ரன்னிங் ரேஸ் மரங்கள்,
தடக்...தடக்...ரிதம்,
அம்மாவின்
மடியில் தூக்கம்,
சந்தோசம்...!


பிறிதொரு நாள் ரயில் பயணத்தில் நீ,
இருபது பேர் மத்தியில் பனிமலராய் நீ,
கருப்புக்கோட்டு கிராஸ்டாக்,
உனக்கு காவலாய் நான், ஆனால் உன் கண்ணில் துப்பாக்கி,
அசைகின்ற கொடி நீ இருக்க, அசைவற்ற மரங்கள் எதற்கு,
எதிர் பர்த்தில் நீ தூங்க,
என் தூக்கம் தொலைந்தது உன் முகத்தில்,
மனதினுள் நூறு வயலின்கள் 'உன்னவள்' என்றுக்கூவ,
பிற ஓசை கிரகிக்கா என் செவிகள் செவிடாயின,
அன்று அடைந்த சந்தோசம்,
நான் கடவுள்...!


இன்று ரயில் பயணத்தில் நான்,
எதிர் பர்த்தில் நீ இல்லை,
அந்த துக்கத்தின் அடையாளமாய் கருப்புக்கோட்டுக்காரர்,
போலிஸ்காரரின் கருப்பு பாட்ஜ்,
என் துக்கம் காண சகியாமல் ஓடி ஒழியும் மரங்கள்,
ச்சு... ச்சு... பரிதாப சத்தம்,
எங்கு நோக்கிலும் வெறுமை,
வெறுமையில் இருந்துதான் உலகம் தோன்றியதாம்,
என் உலகம் எப்பொழுது தோன்றும்?

ஒரு கால் லல்லு பிரசாத் யாதவிற்கு தெரிந்திருக்கலாமோ???

Monday, February 16, 2009

வயது ! ! !


வயதினால் வருதலா அறிவு?
மூத்தவர் புத்திமான் என்ற பேதம்
கிடையாது என்று புகட்டினான் வேதம்
திருஞானசம்பந்தனும் அப்பருக்கே... !

Friday, February 13, 2009

முதல் சந்திப்பு...


வெண்தாமரை நீ கைகுலுக்க
சூரியன் நான் சந்திரனாய் குளிர்ந்தேன் !
உன் பெயரை மறுபடி கேட்ட பொழுது
நீ எண்ணியிருபாய் என் காது மந்தம் என்று,
பாவம் உனக்கெப்படி தெரியும்
உன் பெயரின் சுவையை என் செவிகள் மறக்க முடியாமல் துடித்ததை !
பட்டிமன்றமே நடத்தலாம்,
உன் பெயர் இயற்கையிலேயே இனிமையா ?
அல்லது உன் இதழ் பட்டதினால் இனிமையா என்று ! ! !


உன் பெயர்,
பெயரா அது?காதல் அகராதி,
ஒரு சொல்லில் இத்தனை பொருளா ?
சங்கின் இனிய நாதம், அது ஒலிக்கும்போது !
உன் தாய்க்கும் தந்தைக்கும்,
நாக்கில் பனி,
தேன் உறைந்து அவர்கள் நாவாக மாறியதோ ???

உன் உடல்,
மீண்டும் உன் தாய்க்கும் தந்தைக்கும்,
நன்றி ... இல்லை ... இல்லை ...
உன் மூதாதையர்களுக்கும் நன்றி,
அவர்களின் மரபணுக்களுக்கும் நன்றி,
மரபணு மாற்றம் என்ற அற்புதத்தைப் படைத்த கடவுளுக்கும் நன்றி !!!

காற்றைப்போல் மெல்லிய தேகம்,
நீரைபோல் ஓடும் இளமை,
புவிஈர்ப்புவிசையுடன் நிலமாகிய கண்கள்,
நெருப்பாகிய உன் பெண்மை,
ஆகாயம் அளவு உன் அழகு,
பஞ்ச பூதத்தில் மனிதன் அடக்கம்,
அதனால்தான் உன்னுள் நானோ ???

எனக்குள் சக்தி இருந்திருந்தால் நாம்
பிரியாமல் பார்த்தது பார்த்தப்படி செய்திருப்பேன் !
அந்த நொடி மாறாதவாரு
அனைத்து கடிகாரங்களையும் நிறுத்தியிருப்பேன் !

விடு... உன்னை யார் என்னுள் இருந்து பிரித்துவிட முடியும் ?

நீ எனைப் பிரிய முனைந்த போது
யுக முடிவோ என்று நினைத்தேன்,
ஆனால் மீண்டும் உன்னை சுவாசிக்க
யுக மரணத்தை சிறிது தள்ளிபோட்டேன் !
நாம் மீண்டும் இணைவோம் என்ற
நம்பிக்கையுடன் பிரிந்தேன் !!!

Friday, January 16, 2009

முக்தி அடையா என் கவிதைகள்..!என் கவிதைகள்,
உனக்காக வடிக்கப்பட்டவை,
உன்னால் உயிர் பெற்றவை, உரு பெற்றவை !

ஆனால் என் உயிரே,
உன்னால் தீண்டப்படாமல்
என் கவிதைகள் கன்னிக் கழியாமலே உள்ளன !
உன்னால் வாசிக்கப்படாமல்
தாழ்வு மனப்பான்மையில் வாழ்கின்றன !

நேற்றுகூட, உன் கைக்கருகே இருந்தும்
நீ படிக்காததால்,
தங்கள் உயிரை முடித்துக் கொள்ள முனைந்தன,
நான் தான் தற்கொலை சட்டப்படி தவறு என்று
அவற்றைத் தடுத்துவிட்டேன் !

அன்பே,
உன் தீண்டாமையால் அவை உள்ளம் உடைந்து,
உயிருக்கு போராடிக் கொண்டிருக்கின்றன,
அவற்றின் அழுகுரல் உனக்கு கேட்க்கவில்லையா?
இல்லை தீண்டாமை பாவச்செயல் என நீ கற்கவில்லையா?

உடனே வா தேவி,
முக்தி அடையா என் கவிதைகளுக்கு,
உன் ஸ்பரிசத்தால் அளித்திடு முக்தி ! ! !