Friday, January 16, 2009

முக்தி அடையா என் கவிதைகள்..!



என் கவிதைகள்,
உனக்காக வடிக்கப்பட்டவை,
உன்னால் உயிர் பெற்றவை, உரு பெற்றவை !

ஆனால் என் உயிரே,
உன்னால் தீண்டப்படாமல்
என் கவிதைகள் கன்னிக் கழியாமலே உள்ளன !
உன்னால் வாசிக்கப்படாமல்
தாழ்வு மனப்பான்மையில் வாழ்கின்றன !

நேற்றுகூட, உன் கைக்கருகே இருந்தும்
நீ படிக்காததால்,
தங்கள் உயிரை முடித்துக் கொள்ள முனைந்தன,
நான் தான் தற்கொலை சட்டப்படி தவறு என்று
அவற்றைத் தடுத்துவிட்டேன் !

அன்பே,
உன் தீண்டாமையால் அவை உள்ளம் உடைந்து,
உயிருக்கு போராடிக் கொண்டிருக்கின்றன,
அவற்றின் அழுகுரல் உனக்கு கேட்க்கவில்லையா?
இல்லை தீண்டாமை பாவச்செயல் என நீ கற்கவில்லையா?

உடனே வா தேவி,
முக்தி அடையா என் கவிதைகளுக்கு,
உன் ஸ்பரிசத்தால் அளித்திடு முக்தி ! ! !