என் கல்லூரி காலத்தில் நான் எனக்குள் கண்டு எடுத்த மற்றொரு அருண், நிறைய கவிதைகள் இங்கு இலக்கணம் மீறியவையாய் இருக்கும், இருப்பினும் எழுதுவோம்...
Friday, January 16, 2009
முக்தி அடையா என் கவிதைகள்..!
என் கவிதைகள்,
உனக்காக வடிக்கப்பட்டவை,
உன்னால் உயிர் பெற்றவை, உரு பெற்றவை !
ஆனால் என் உயிரே,
உன்னால் தீண்டப்படாமல்
என் கவிதைகள் கன்னிக் கழியாமலே உள்ளன !
உன்னால் வாசிக்கப்படாமல்
தாழ்வு மனப்பான்மையில் வாழ்கின்றன !
நேற்றுகூட, உன் கைக்கருகே இருந்தும்
நீ படிக்காததால்,
தங்கள் உயிரை முடித்துக் கொள்ள முனைந்தன,
நான் தான் தற்கொலை சட்டப்படி தவறு என்று
அவற்றைத் தடுத்துவிட்டேன் !
அன்பே,
உன் தீண்டாமையால் அவை உள்ளம் உடைந்து,
உயிருக்கு போராடிக் கொண்டிருக்கின்றன,
அவற்றின் அழுகுரல் உனக்கு கேட்க்கவில்லையா?
இல்லை தீண்டாமை பாவச்செயல் என நீ கற்கவில்லையா?
உடனே வா தேவி,
முக்தி அடையா என் கவிதைகளுக்கு,
உன் ஸ்பரிசத்தால் அளித்திடு முக்தி ! ! !
எதை பற்றி
காதல்
Subscribe to:
Post Comments (Atom)
15 comments:
Ungal pagudiyil mudhal murai en padivu!
"இல்லை தீண்டாமை பாவச்செயல் என நீ கற்கவில்லையா?"
Rasithaen!:-)
nandri archana...infact i am reading your blog when i received this comment...coincidence :)
commmentskku linkla nakkeerargalnu pottirukkeenga.. appo kandippa kutram edhaenum kandubichae theeranumo ;)
Kavithai nalla irukku.. unga ammani seekiram unga kavithaiya sparisichu.. padichu adhukku mukthi kudupaargalaaga :D
thanks G3 for dropping by...
and en ammanikku tamil theriya vendumae atharkku :P
***நேற்றுகூட, உன் கைக்கருகே இருந்தும்
நீ படிக்காததால்,
தங்கள் உயிரை முடித்துக் கொள்ள முனைந்தன,
நான் தான் தற்கொலை சட்டப்படி தவறு என்று
அவற்றைத் தடுத்துவிட்டேன் !****
VARIGALIN LAAVANYAM ARUMAI. VANAKKAM PODA VAIKKIRATHU. VAALTHTHUKKAL.
@ Vasavan
nandri ayya meendum varuga...
உங்களுக்கும் அனைவருக்கும் இந்திய குடியரசு தின வாழ்த்துக்கள்.
good one :)
@ suganya
nandri
வாவ், இவ்வளவு நாள் ஒரு அருமையான கவிஞரின் வரிகள் ஏன் கண்கள்இல் பட வில்லை.
அருமையான கவிதை.
இந்த கவிதை எழுதறவங்களைப் பார்த்தாலே என் காதிலேர்ந்து கொஞ்சம் புகை வரும். :-)
@ Vijay anna
nandri anna...naan romba kathukutty...he he
devi padichaangalo ilayo...ulagame padikaramaari blog la potuteenga:)nice one:)
nandringaa madam...
arumayana kavithaikal...
valthukal nanba......
nandri reva... :)
Post a Comment