வெண்தாமரை நீ கைகுலுக்க
சூரியன் நான் சந்திரனாய் குளிர்ந்தேன் !
உன் பெயரை மறுபடி கேட்ட பொழுது
நீ எண்ணியிருபாய் என் காது மந்தம் என்று,
பாவம் உனக்கெப்படி தெரியும்
உன் பெயரின் சுவையை என் செவிகள் மறக்க முடியாமல் துடித்ததை !
பட்டிமன்றமே நடத்தலாம்,
உன் பெயர் இயற்கையிலேயே இனிமையா ?
அல்லது உன் இதழ் பட்டதினால் இனிமையா என்று ! ! !
உன் பெயர்,
பெயரா அது?காதல் அகராதி,
ஒரு சொல்லில் இத்தனை பொருளா ?
சங்கின் இனிய நாதம், அது ஒலிக்கும்போது !
உன் தாய்க்கும் தந்தைக்கும்,
நாக்கில் பனி,
தேன் உறைந்து அவர்கள் நாவாக மாறியதோ ???
உன் உடல்,
மீண்டும் உன் தாய்க்கும் தந்தைக்கும்,
நன்றி ... இல்லை ... இல்லை ...
உன் மூதாதையர்களுக்கும் நன்றி,
அவர்களின் மரபணுக்களுக்கும் நன்றி,
மரபணு மாற்றம் என்ற அற்புதத்தைப் படைத்த கடவுளுக்கும் நன்றி !!!
காற்றைப்போல் மெல்லிய தேகம்,
நீரைபோல் ஓடும் இளமை,
புவிஈர்ப்புவிசையுடன் நிலமாகிய கண்கள்,
நெருப்பாகிய உன் பெண்மை,
ஆகாயம் அளவு உன் அழகு,
பஞ்ச பூதத்தில் மனிதன் அடக்கம்,
அதனால்தான் உன்னுள் நானோ ???
எனக்குள் சக்தி இருந்திருந்தால் நாம்
பிரியாமல் பார்த்தது பார்த்தப்படி செய்திருப்பேன் !
அந்த நொடி மாறாதவாரு
அனைத்து கடிகாரங்களையும் நிறுத்தியிருப்பேன் !
விடு... உன்னை யார் என்னுள் இருந்து பிரித்துவிட முடியும் ?
நீ எனைப் பிரிய முனைந்த போது
யுக முடிவோ என்று நினைத்தேன்,
ஆனால் மீண்டும் உன்னை சுவாசிக்க
யுக மரணத்தை சிறிது தள்ளிபோட்டேன் !
நாம் மீண்டும் இணைவோம் என்ற
நம்பிக்கையுடன் பிரிந்தேன் !!!