Tuesday, February 17, 2009

என் ரயில் பயணங்கள்...


அன்றொரு நாள் ரயில் பயணங்கள் சுவையானவை,

கருப்புக்கோட்டு அங்கிள்,
துப்பாக்கி சார்,
ரன்னிங் ரேஸ் மரங்கள்,
தடக்...தடக்...ரிதம்,
அம்மாவின்
மடியில் தூக்கம்,
சந்தோசம்...!


பிறிதொரு நாள் ரயில் பயணத்தில் நீ,
இருபது பேர் மத்தியில் பனிமலராய் நீ,
கருப்புக்கோட்டு கிராஸ்டாக்,
உனக்கு காவலாய் நான், ஆனால் உன் கண்ணில் துப்பாக்கி,
அசைகின்ற கொடி நீ இருக்க, அசைவற்ற மரங்கள் எதற்கு,
எதிர் பர்த்தில் நீ தூங்க,
என் தூக்கம் தொலைந்தது உன் முகத்தில்,
மனதினுள் நூறு வயலின்கள் 'உன்னவள்' என்றுக்கூவ,
பிற ஓசை கிரகிக்கா என் செவிகள் செவிடாயின,
அன்று அடைந்த சந்தோசம்,
நான் கடவுள்...!


இன்று ரயில் பயணத்தில் நான்,
எதிர் பர்த்தில் நீ இல்லை,
அந்த துக்கத்தின் அடையாளமாய் கருப்புக்கோட்டுக்காரர்,
போலிஸ்காரரின் கருப்பு பாட்ஜ்,
என் துக்கம் காண சகியாமல் ஓடி ஒழியும் மரங்கள்,
ச்சு... ச்சு... பரிதாப சத்தம்,
எங்கு நோக்கிலும் வெறுமை,
வெறுமையில் இருந்துதான் உலகம் தோன்றியதாம்,
என் உலகம் எப்பொழுது தோன்றும்?

ஒரு கால் லல்லு பிரசாத் யாதவிற்கு தெரிந்திருக்கலாமோ???

36 comments:

நாமக்கல் சிபி said...

அழகான பயணம்!

நாமக்கல் சிபி said...

கொஞ்சம் கொஞ்சாமா எல்லா பதிவுகளையும் படிச்சிட்டு அப்பாலிக்கா வரேன்!

Anonymous said...

தங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி நாமக்கல் சிபி

Anonymous said...

கருத்து சொல்லிட்டா நீர் என்ன பெரிய நக்கீரரா?

குற்றம் கண்டு பிடித்துச் சொல்லும் வரை நீர் நக்கீரர் என்பதை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன்!

Anonymous said...

அங்கம் புழுதிபட அரிவாளில் நெய்பூசி
பங்கம் படவிரண்டு கால்பரப்பி
சங்கதனைக்

கீர் கீர் என்று அறுக்கும் நக்கீரனா
என் கவியை ஆராய்ந்து சொல்லத் தக்கவன்?

Anonymous said...

என்னைய வெச்சி ஏதும் காமெடி கீமெடி பண்ணலையே!

Anonymous said...

சங்கறுப்பதெங்கள் குலம்!
சங்கரனார்க்கேது குலம்!
அறுத்துண்டு வாழ்வோம்! ஐயனே!
உம்மைப் போல் இரந்துண்டு வாழ்வதில்லை!

Anonymous said...

நக்கீரா! என்னை நன்றாகப் பார்!

நான் எழுதிய தமிழ்க்கவிதை குற்றமா?

Anonymous said...

ஐயனே! நீரே முக்கண் முதல்வனும் ஆகுக! ஒரு நாள் முதல்வன் அர்ஜூனும் ஆகுக!

கடைக்கண் காட்டினும் குற்றம் குற்றமே!
நெற்றிக் கண் திறப்பினும் குற்றம் குற்றமே!

Anonymous said...

இந்த சீன்ல எனக்கு டயலாக்கே இல்லையா?

Anonymous said...

//தருமி said...

இந்த சீன்ல எனக்கு டயலாக்கே இல்லையா?//

நீங்க இப்பவெல்லாம் பதிவே போடுறதில்லெ! டயலாக் மட்டும் எதுக்கு?

Anonymous said...

நாந்தான் தீர்ப்பு சொல்லுவேன்!

G3 said...

Annae.. poondhu velayaadareenga pola :)))

kalakkunga :D


Indha comment Sibi-yoda commentukku.. innum posta padikkala :P

G3 said...

Rayil payanathula thuppaki police-a? edho idikkudhae.. neenga enna kaithiya payanam senjeengalo :P

Anonymous said...

//நாந்தான் தீர்ப்பு சொல்லுவேன்!//

யோவ்! நான் எதுக்கு இங்க இருக்கேன்!

Anonymous said...

நாட்டாமை பாதம் பட்டா...அங்கே வெள்ளாம வெளையுமடா....!

Anonymous said...

ஆமா இவரு நடந்துட்டா நாத்து கூட நடத் தேவையில்லை!

G3 said...

//ஒரு கால் லல்லு பிரசாத் யாதவிற்கு தெரிந்திருக்கலாமோ??? //

avarukkum oru kaal thaan theriyuma? appo yaarukkudhaan rendu kaalum theriyum??? !!!

Anonymous said...

வதந்திகளை நம்பாதீர்!

Vijay said...

வாவ் என்று சொல்லத் தோன்றுகிறது.

அதென்னப்பா இந்த கதை கவிதையில மட்டுமே எதிர் பெர்த்துல ஃபிகர் வருது. நானும் இது வரைக்கும் எம்புட்டோ தடவை ரயில்ல போயிருக்கேன், சுமாரான ஃபிகர் கூட தனியா வந்ததில்லை. அதுக்கெல்லாம் மச்சம் வேணும் போலிருக்கு :-)

படங்கள் அருமை :-)

VASAVAN said...

ஏங்க, என்ன நடக்குதுன்னே தெரியல, புரியல, பின்னூட்டம் இடலாம் என்று வந்தேன். இங்கு திருவிளையாடல் படம் அல்லவா ஒட்டிக்கொண்டிருக்கிறது?

உங்கள் ராட் மாதவ் said...

Kavithai super thala.

Appuram enakkoru vunma therinjaaganum, enna nadakkuthu inge,
ayya enakkoru vunma therinjaaganum,

Ohh. Sorry, thiruvilayaadal padam oduthaa. naan 'muthal mariyathai' nu thappa ninachchutten.

//avarukkum oru kaal thaan theriyuma? appo yaarukkudhaan rendu kaalum theriyum??? !!!//

G3 correta sollettanga.

Anonymous said...

Mudhal pakugthi muzhuvadhum arumai:-)

அன்று அடைந்த சந்தோசம்,
நான் கடவுள்...!

Oru chinna rendu varila, evlo niravaana vishayam velipaduthirukeenga:-)

Azagaana ezhuthu:-)

Lancelot said...

@ Sibhi anna...

ippadi en perlayum appuram chumma iruntha nakeeran gopal, thenkachi, solomon, nakeeran, tharumi nu palla perulla - comment podaa vantha VASAVAN sirra bayamuruthunathuku romba nandri :P :P....neenga than antha comment ellam pottinganu yaarkittayum naa solla matten anna....Anni nayantara vazhgaa...

Lancelot said...

@ G3 akka

akka eppovumae railway police will carry gun- I have seen it whenever i travel in train - naan solrathu north poraa train namma chennai parakkum rail pattri alla...

and Lallukku oru kaal mattum illa naallu kaalum theriyum- mattu theevana ullala mattuna avarukku ithukudaa theriyaati eppadi??

Lancelot said...

@ Vijay anna


nandri anna....and he he he ennakum ithuvaraikkum nadanthathu illa...neenga sonna mathiri athukellam oru macham vennum...aana entha edathulla appadinu sollama vittutingaa???

and padangal googlidam suttathu...

Lancelot said...

@ Rad Madhav and VASAVAN

Thiruvilayaadal padam ottu nathu naan illaingo...athu Sibhi annathaannu solla mattenu avarkitta thalaila adichu sathyam panni irukengo appuram atha ungalta sollita Nayantara vidhavai aayiduvaangango...

Lancelot said...

@ Pan

Vasheeshtaar Vaayal Brahmarishi pattam :)...

Anonymous said...

wow

lots of tamil bloggers ...

Lancelot said...

he he he he nakeeran gopal ellam illainga athu gopal palpodi vikiraa namma annachi

G3 said...

//athu Sibhi annathaannu solla mattenu avarkitta thalaila adichu sathyam panni irukengo appuram atha ungalta sollita Nayantara vidhavai aayiduvaangango//

Un thalaila nee adichu sathyam pannadhukkum nayanthara vidhavai aagaradhukkum enna man linku??

Kadaisila sibi anna linelayae cross panna aarambichitiya??? !!!

Lancelot said...

akka ithu ungallukae overaa illa killi polla pondaatti irukum pothu ____________________________ ethuku???? :P :P naan sonnathu avar thalaila...

நட்புடன் ஜமால் said...

படங்கள் அருமை

பயணமும் ...

Lancelot said...

nandri jamal anna

VG said...

வெறுமையில் இருந்துதான் உலகம் தோன்றியதாம்,
என் உலகம் எப்பொழுது தோன்றும்?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

ithe oru naalukaga enathu pataiyilum, irukkum mutkalai ellam agatri vithu kaatu kondirukiren...

Lancelot said...

@ Viji

bharathiraja movie effectla irukku :P