Saturday, September 4, 2010

கோழைக்குள் வீரன்...

மௌனமாய் இருப்பதனால் மெண்மை என்பதாகாது,
தலையை அசைபதனால் தத்தி என்று ஆகாது,
கோழைக்கும் கோபம் உண்டு,
உண்மையில் கோழையே வீரன் தன் பயம் அவனுக்கு தெரியும்,
வீரனை விலங்கிடும், சூழல் விலங்கின் திறம் கம்மி
மிரண்டால் சிதறிடும் விலங்குகள் எட்டுத்திக்கும்,
வீரனுக்கு தேவை திடம் மட்டுமே,
தன் சொந்தக் காலில் நிற்பானவன்,
தலை வணங்க மாட்டான், கால் பிடிக்க மாட்டான்,
அடித்தால் நெற்றியடிதான், புறமுதுகு காண்பித்தால் அது உன் கேடு !
எத்தனைக் காலம்தான் கோழைபோல் நடிப்பது?
உண்மையை அறிந்தால் நீ இங்கு அழிவாய்,
என் கல்லறைக்கு என்றோ இடம் பார்த்துவிட்டேன்,
மரணத்திடம் எனக்கு பயமில்லை, அதற்கே என்னிடம் பயம் !
சொந்தக்காலில் நிற்பதனால் கிழே விழுந்தால் அடி அதிகமில்லை,
அப்பன் தோளில் நிற்கும் நீ கிழே விழுந்தால் அடி அதிகம் !
நீ செல்வாய் தனியாக,
நான் செல்வேன் தனியாக,
பிறந்திடும்போது இருவருமே நிர்வாணம்தான்,
இதை நீ உணராவிட்டால் வாழ்க்கையே நிர்மூலம்தான் !
சொல்வதைச் சொல்லிவிட்டேன் மற்றவை உன் கையில்.

உடம்பினில் ஈரமிருந்து யாருக்கும் பயனில்லை,
மனதினில் ஈரமுள்ள எனக்கிங்கு மரணமில்லை,
சுடுகாட்டில் ஆடுகின்ற அந்த ஆதிசிவன் நான்தானே,
மண்டையோடும் சாம்பலும்தான் எனதுடமை,
புரிந்து நீ வழிவிடு,
இல்லையேல் உயிர்விடு !

3 comments:

நட்புடன் ஜமால் said...

கோழைக்குள்ளும் வீரன்

இலக்கண மீறல்கள்

Athisaya said...

அழகான மீறல்கள்..அறிவானவயும் கூட...

Athisaya said...

அழகான மீறல்கள்..அறிவானவயும் கூட...