
I am writing a poem after a long time. This is dedicated to all the workers irrespective of their race and country who works in a different nation just to make sure that their family should eat three meals a day...
மணி இரண்டு, என் கையில் இருந்த திப்பின் பாக்ஸ் மண்டையில் அடிக்கும் வெயில் போலவே சுடுகிறது,
சென்ற முறை ஊர் சென்ற பொழுது அரசாங்க மருத்துவமனையில்
"உனக்கு அல்ஸர் உள்ளது சரியான நேரத்தில் உண்ண வேண்டும்" என்று சொன்னதாக ஞாபகம்.
மூடியை திறந்தேன், ராமசாமி செய்த சோறு
அவன் தலை முடியை போலவே காய்ந்து போய் இருந்தது கண்டிப்பாக விக்கல் வரும்.
அதர்க்கு ஊற்றிக்கொள்ள சிகப்புத் தண்ணீர், அதை வைத்த ஹகீமை கேட்டால் ரசம் என்பான்,
நான் வைக்கும் சாம்பார கிண்டல் செய்வான், அதனால் அவனை கேட்கவில்லை.
தொட்டுக்கொள்ள அந்தோனி வைத்த உருளைக்கிழங்கு,
அவனுக்கு எத்தனை முறை சொன்னாலும் தோள் உரித்து வெட்டி வேக வைக்க மாட்டான்,
சரியான உருளைக்கிழங்கு சோம்பேறி, அது க்ரிகெட் பந்தை விட கடினமாக இருந்தது.
இன்று எனக்கு சமையல் வேலை இல்லை,
காலையில் எழுந்து சமைய்ப்பது போன்ற ஒரு கொடுமை வேறு எதுவும் இல்லை.
சீக்கிரம் சாப்பிட வேணும் இல்லாட்டி அந்த ஸூபர்வைஸர் திட்டுவான்,
தேவை இல்லாமல் என் அம்மாவை அசிங்க படுத்துவான்,
எதுவும் சொல்ல முடியாது, ஊருக்கு போறதுக்கு முன்னாடி இருக்குடா உனக்கு...
முதல் வாய் எடுத்து வைத்தேன், என்ன பொழப்பு டா சாமி இது
கண்ணீர் முட்டியது, காலையில் இருந்து ஒரு வாய் கூட சாப்பிடள
அம்மா இருந்து இருந்தா இப்படி ஆகும்மா?
ஹ்ம்ம்ம் அந்த அம்மா இருக்கணும்னு தானே இந்த பொழப்பு, இருதய நோயாளி.
சரி இப்பொழுது இதை தின்ன என்ன வழி,
ரசத்தை மீண்டும் பார்த்தேன் சிகப்புத் தண்ணீர்,
இதை நான் சோற்றில் உற்றாவிட்டால்
என் தங்கைக்கு மஞ்சள் நீர் உற்றா முடியாது
உருளைக்கிழங்கை நான் தின்ணாவிட்டால்
என் தம்பி பந்து விளையாட முடியாது.
கிராமத்தில் நிலா சோறு தின்று உள்ளேன்,
சித்திர பௌர்ணமி அன்று குடும்ப ஓததுமைக்காக அம்மா
சாதம் ஊட்டி விடுவாள், அப்படி செய்தால் குடும்பம் செழிக்கும் என்பாள்
இதோ இன்று நான் உண்பது வெயில் சோறு
ஊரில் உள்ள என் குடும்பம் மூன்று வேலை சோறு தின்ன வேண்டும் என்பதற்காக !!!
மீண்டும் விக்கல் ஆனால் அதில் ஒரு இன்பம்...