Friday, December 5, 2008

நாட்டுப்புறப்பாடல் - காதல் கலம் ! ! !


ஏர் புடிச்சி நா உழுவயிலே,
சீர் எடுத்து வந்தா உன் ஆத்தா !

அண்ண மவன் எனக்கு கொடுக்கவே
உன்ன பெத்த உன் ஆத்தா !

வாங்க அத்தனு நா அழைக்கயில,
அவ முந்தானையில மறைஞ்ச தங்கசிலயே,
உன் குதிக்கால் அழகுல என்ன கொததிட்டு போன கொக்கே !.

அப்ப ஒருக்கா நீ ஆத்துல குளிக்கயில,
அடிநீச்சல் அடிச்சி உன் கால நான் இழுக்கயில,
நீ 'முதல. முதல' னு கத்த, அது
என் காதுல 'முத்தம், முத்தம்' னு விழ;
நீ கேட்டத மறுக்காம நானும் கொடுத்தேன் !
அப்ப செவந்த உன் உதடு இன்னும் அப்படியே இருக்கா?

தை மாசம் பரிசம் போட மாமாவ வரச் சொல்லு,
அதுக்கு முன்ன உங்கண்ணன மாமாவாக்க நா வழி சொல்றேன்,
பொழுது சாஞ்சி, பூமுடிச்சி தோப்பு பக்கம்
வா என் மாமரத்துக் கிளியே ! ! !

6 comments:

Karthik said...

Thozha.. tag panniyaachu.. tamil blog paarunga.. Unga manasu punpadum padiya edhavadhu pannirunda manichikonga!!! edho ennala mudhinja mokka comedy panniruken.. vayiru punnachunaa santhosam.. comment pannunga.. pidichirundaa!!!! Ungalukaka naa oru TAG yosikiren!!!

Poornima Saravana kumar said...

நாட்டுப்புறப்பாடல் காதல் அருமை:)

Lancelot said...

nandri hein...meendum varugaa :)

Anonymous said...

Idhu thangal vaazhkayil Kaadhal kaalam polluladhu!

"உன் குதிக்கால் அழகுல என்ன கொததிட்டு போன கொக்கே !."

aeno aadavargal taan uvamaigal kaiyaalvadhil vallavargalaaga ullergal.

Nandru!!Miga!

Lancelot said...

@ Archana

en valvil kadhal kaalam endru ellam illai...intha kavithai naan 4 varudangal munbu eluthiyathu...pen kavigal uvamaigal solli kaalam kadathuvathillai, avargal neradiyaaga solpavargal...naangal than uvamai endru sutri valaithu solpavargal...

Om Santhosh said...

very nice